வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#birthday1
பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது...

வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)

#birthday1
பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள
4 பரிமாறுவது
  1. 1 மீடியும் சைஸ் வாழைப்பூ
  2. 1/2 கப் கடலை பருப்பு
  3. 1/2 கப் துவரம் பருப்பு
  4. 5-7 வர மிளகாய்
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  9. தேவைக்குஉப்பு , கறிவேப்பிலை
  10. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள
  1. 1

    முதலில் வாழைப்பூவை சிறுதாக அரிந்து மோர் தண்ணீரில் போட்டு வைத்து கழுகி எடுத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு எடுத்துக்கவும்.

  2. 2

    கடலை பருப்பு, துவரம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊரவிட்டு வடி கெட்டி வரமிளகாய் அதுக்கு தேவையான உப்பு சேர்த்து அரைத்து க்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஸ்டவ்வில் வைத்து உள்ளே ஒரு தட்டு வைத்து அரைத்த பருப்பை ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு ஆறவிட்டு உதிர்த்து வைத்துக்கவும்.

  4. 4

    ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதில் வேக வைத்து உதிர்த்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்,

  5. 5

    நன்றாக உதிர்ந்து வந்ததும் அத்துடன் வேக வைத்து வெச்சிருக்கும் வாழைப்பூவை சேர்த்து நன்றாக கலந்து கிளறி விட்டு ஸ்டாவ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்.

  6. 6

    சுவையான வாழைப்பூ பருப்பு உசிலி சாப்பிட தயார்.. சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக பிரமாதமாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes