Suratkari (Suratkari Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#nutrient2
#அம்மா
#Book
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......
Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma.......

Suratkari (Suratkari Recipe in Tamil)

#nutrient2
#அம்மா
#Book
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......
Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
4 பரிமாறுவது
  1. பூரணம் செய்ய:
  2. 1டேபிள் ஸ்பூன் ரவை
  3. 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  4. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 3டேபிள் ஸ்பூன் பிரெஷ் கிரீம்
  6. 3டீஸ்பூன் சர்க்கரை
  7. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  8. 1டேபிள்ஸ்பூன் பிஸ்தா
  9. 1டீஸ்பூன் சாரப்பருப்பு
  10. 7பாதாம்
  11. 10உடைத்த முந்திரி
  12. மேல் மாவு:
  13. 1௧ப் மைதா
  14. 1சிட்டிகை உப்பு
  15. 1சிட்டிகை பேக்கிங் சோடா
  16. 3டேபிள் ஸ்பூன் நெய்
  17. 1/4கப் தண்ணீர்
  18. 3குழி கரண்டி ஆயில்
  19. அலங்கரிக்க
  20. 2பாதாம்
  21. சர்க்கரை ஜீரா செய்ய :
  22. 1/2கப் சர்க்கரை
  23. 1கப் தண்ணீர்
  24. 1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    பால் 2 கப் தண்ணீர் விடாமல் காய்ச்சி ஆடையை மட்டும் எடுத்து அடித்து கலக்கி பிரீஸரில் வைக்கவும்.பிரெஷ் கிரீம் ரெடி.கடாயில் நெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி ரவை 1 டேபிள் ஸ்பூன் வறுத்து,அதில் பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வறுக்கவும்.

  2. 2

    பிரேஸரில் வைத்த பிரெஷ் கிரீம் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி சர்க்கரை 3 டீஸ்பூன், ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கி பொடித்து வைத்த பாதாம் 7,உடைத்த முந்திரி 10,பிஸ்தா 1 டேபிள் ஸ்பூன்,சாரப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் சாரப்பருப்பு சேர்க்கவும்.

  3. 3

    பொடித்து வைத்த பருப்பு வகை களை சேர்த்து கலக்கி வைக்கவும்.பூரணம் ரெடி.

  4. 4

    மைதா மாவு 1 கப், உப்பு 1 சிட்டிகை,பேக்கிங் சோடா 1 சிட்டிகை சேர்த்து சலித்து வைக்கவும்.

  5. 5

    நெய் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சிறிது சேர்த்து பிசைந்து வைக்கவும்.10 நிமிடம் கழித்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்து பூரணம் நடுவில் வைக்கவும்.

  6. 6

    அதை மோமோஸ் செய்வது போல மடித்து மேல் மாவு எடுத்து விட்டு நடுவில் அமுக்கி தட்டையாக செய்து வைக்கவும்.கடாயில் 3 குழி கரண்டி ஆயில் விட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    பொன்னிறமாக பொரித்து அடுக்கி வைக்கவும்.சர்க்கரை 1/2 கப் எடுத்து வைக்கவும்.

  8. 8

    தண்ணீர் 1 கப் எடுத்து வைக்கவும்.அகலமான பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

  9. 9

    பொரித்து வைத்ததை சர்க்கரை பாகுவில் சேர்த்து 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும்.

  10. 10

    அலங்கரிக்க 2 பாதாம் ஊற வைத்து தோல் நீக்கி, பொடியாக நறுக்கி மேலே தூவவும். Suratkari ரெடி.சுவை சூப்பர்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes