கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#VK

கிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்

கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)

#VK

கிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கட்டு சக்ரவர்த்தி கீரை (எங்க ஊர் ஸ்பெஷல்)
  2. 1 கப் துவரம்பருப்பு
  3. 1/4 கப் பாசிப்பருப்பு
  4. 1 கப் வெள்ளை சுண்டல்
  5. 1 கப் சின்ன வெங்காயம்
  6. 2 பச்சைமிளகாய்
  7. 4 தக்காளி
  8. நெல்லிக்காய் அளவுபுளி
  9. 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  10. 1 ஸ்பூன் வறுத்து அரைத்த சீரக மிளகுத்தூள்
  11. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 20 பல் பூண்டு
  13. 1 ஸ்பூன் கடுகு
  14. 2 ஸ்பூன் சீரகம்
  15. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  16. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  17. 2 ஸ்பூன் வெல்லம்
  18. 2குழிகரண்டி நல்லெண்ணெய்
  19. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  20. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    இந்த கீரை கோயம்புத்தூர் ஸ்பெஷல் வீட்டுக்கு வீடு இருக்கும் ருசி மிகவும் நன்றாக இருக்கும் அதனால் தான் இதற்கு சக்கரவர்த்தி கீரை னு பெயர் இத கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்

  2. 2

    கீரை உடன் பருப்பு தக்காளி 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு வேகவைத்து கடைந்து கொள்ளவும்

    கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி உப்பு 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்

    புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் தோல் உரித்த முழு பூண்டு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கட்டும் கடைந்த கீரை உடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  5. 5

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து சாம்பார் பொடி சீரக மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    நன்றாக கொதித்ததும் கீரை உடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  7. 7

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு நெய் விட்டு நன்றாக கலந்து இறக்கவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான கீரை கடையல் ரெடி சுண்டலுக்கு பதிலாக தட்டபயறு மொச்சை சேர்த்தும் செய்யலாம் கலந்து போட்டும் செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes