* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#HF
மைதாவிற்கு பதில், கோதுமை மாவு சேர்ப்பதால் மிகவும் ஹெல்தியானது. இந்த கேக் பார்ப்பதற்கே மிகவும் அழகானது.சுவையானது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4 மணி
6 பேர்
  1. 2 கப்கோதுமை மாவு
  2. 1கப்சர்க்கரை
  3. 2 டேபிள் ஸ்பூன்பால் பவுடர்
  4. 1டீ ஸ்பூன்சிவப்பு கலர் பவுடர்
  5. 1ஈனோ பாக்கெட்
  6. 1/2 கப்எண்ணெய்
  7. 1/2 டம்ளர்வெது வெதுப்பான தண்ணீர்
  8. 1 டேபிள் ஸ்பூன்சீரக மிட்டாய்
  9. 1 டேபிள் ஸ்பூன்அலங்கரிக்க:- சீரக மிட்டாய்
  10. கலர் பவுடரை கரைக்க:-
  11. 1 டேபிள் ஸ்பூன்காய்ச்சி ஆறின பால்

சமையல் குறிப்புகள்

3/4 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.கலர் பவுடரை காய்ச்சி ஆறின பாலில், நன்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சிறிய மிக்ஸி ஜாரில் சர்க்கரையை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்ததை பௌலில் எடுக்கவும்.

  4. 4

    பெரிய பௌலின் மேல் சல்லடையை வைத்து, முதலில் மாவை போட்டு சலிக்கவும்.

  5. 5

    அடுத்து சர்க்கரையை, போடவும்.

  6. 6

    பிறகு பால் பவுடரை சேர்க்கவும்.

  7. 7

    கடைசியாக ஈனோவை சேர்க்கவும்.

  8. 8

    சேர்த்ததும்,அனைத்தையும் நன்கு சலித்து ஸ்பூனால் கலந்துக் கொள்ளவும்.

  9. 9

    பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  10. 10

    பிறகு வெது வெதுப்பான தண்ணீரை விடவும்.

  11. 11

    ஒன்று சேர கலக்கவும்.

  12. 12

    கலந்தும், பாலில் கரைத்த கலரை சேர்த்து நன்கு கலக்கவும்.

  13. 13

    அடுப்பை ஹையில் வைத்து கடாயை 5 நிமிடம் நன்கு சூடுபடுத்தியதும்,ஸ்டாண்டை போடவும்.

  14. 14

    பௌலில் எண்ணெயை நன்கு தடவிக் கொண்டு, கோதுமை மாவை நன்கு தூவி மீது மாவை நன்கு தட்டிக் கொள்ளவும்.

  15. 15

    கலந்த கலவையை கடாய்க்குள் வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து தட்டு போட்டு 40 நிமிடம் வேக விடவும்.

  16. 16

    30 நிமிடம் ஆனதும் தட்டை திறந்து, மேலே சீரக மிட்டாயை தூவவும்.

  17. 17

    40 நிமிடம் ஆனதும், டூத்பிக்கால் குத்தி ஒட்டாமல் வந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  18. 18

    ஆறினதும், தட்டை திருப்பிப் போடவும்.

  19. 19

    பிறகு கட் செய்து டிரேயில் வைத்து, மேலே சீரக மிட்டாயை தூவவும்.இப்போது மிகவும் கலர்ஃபுல்லான,*ரெட் வெல்வெட் கேக்* தயார்.இதில் கோதுமை மாவு சேர்த்ததால் கூடுதல் சத்து கிடைக்கும்.செய்து ஜமாய்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes