பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி(pallipalayam chicken gravy recipe in tamil)

பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி(pallipalayam chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி செய்வதற்க்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
1/2கிலோ சிக்கன் துண்டுகள்.
6கிராம்பு, 5ஏலக்காய், 1 சிறிய துண்டு பட்டை, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் சோம்பு/ பெருஞ்சீரகம்,3டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள். - 2
மேலே குறிப்பிட்ட முழு மசாலா பொருட்களை ஒரு பாதத்திரத்தில் போடவும்.
முழு மசாலா பொருட்களை எண்ணெய் இல்லாமல் பாத்திரத்தில் போட்டு 2நிமிடம் வறுக்கவும்.
10காஸ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாயில் 5மிளகாயில் உள்ள விதைகளை நீக்க வேண்டும்.
எண்ணெய் இல்லாமல் பாத்திரத்தில் போட்டு காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய்களை லேசாக வறுக்க வேண்டும். - 3
வறுத்த முழு மசாலா பொருட்கள் மற்றும் காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5டேபிள் ஸ்பூன் (தேவையான அளவு) எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடான பிறகு அரைத்து வைத்த மசாலா பவுடரை போட்டு கிளரவும்.சிறிதளவு சூடு ஏறிய பிறகு 1/2கிலோ சிக்கன் துண்டுகளை போட்டு 3நிமிடம் நன்றாக வதக்கவும். - 4
அடுத்து 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,2டீஸ்பூன் மிளகாய் விழுது சேர்க்கவும்(மிளகாய்களை ஊரவைத்து அரைத்த செஜ்வான் சட்னி விழுது...
அடுத்து 3வெங்காயம் நீளமாக வெட்டிக் கொள்ளவும், 15பற்கள் பூண்டு, 2இன்ச் இஞ்சி 1துண்டு.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு 15பற்கள் பூண்டு, 2 இன்ச் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போடவும்.
அடுத்து நறுக்கி வைத்த 3வெங்காயத்தை போட்டு லேசான பொன் நிறமாகும் வரை வதக்கவும். - 5
வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
அரைத்த வெங்காயம்,இஞ்சி,பூண்டு பேஸ்ட்டை சிக்கனில் சேர்த்து கிளரி 5-7நிமிடம் நன்றாக வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5தக்காளி பழத்தை 5-7நிமிடம் தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும்.
சூடு ஆறிய பின் தோல் நீக்கி கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்..
அடுத்து தக்காளி பேஸ்ட்டை சிக்கனில் சேர்த்து நன்றாக வதக்கி மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும். - 6
குறைந்த தீயில் சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
3டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கிளரவும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மூடிநறுக்கிய தேங்காயை பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி.எண்ணெய் சூடான பிறகு நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். - 7
1மூடி நறுக்கிய தேங்காயை பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி.எண்ணெய் சூடான பிறகு நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு லேசாக வறுக்கவும்.
அடுத்து வறுத்து வைத்த தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும்.
அடுத்து தேங்காய் விழுதுகளை சிக்கன் கலவையில் சேர்க்கவும்.
அடுத்து சிக்கன் கலவையில் தேங்காய் விழுதுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொத்துமல்லித்தழைகள் தூவவும். 'பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"
Similar Recipes
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
சிக்கன் ட்ரம்ஸ்டிக் (chicken Drumstick Recipe in Tamil)
சுவையானது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு#பார்ட்டி ரெசிப்பீஸ்#chefdeena Nandu’s Kitchen -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)
#flourMaida Shanthi Balasubaramaniyam -
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
-
More Recipes
கமெண்ட்