வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 டம்ளர் வெள்ளை ரவை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/4 தேக்கரண்டி கடுகு
  4. 10 கருவேப்பிலை
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 அங்குலம் இஞ்சி
  7. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 கப் எண்ணெய்
  10. 4 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இஞ்சி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் ‌. கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடு ஏறியதும் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து இதில் பொடியாக நடிக்க இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    ரவையை வெறும் வட சட்டியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடவும்.

  3. 3

    இதில் வருத்த ரவையை சேர்த்து சிறு தீயில் கைவிடாமல் கிளறவும் கட்டி சேராமல் கிளற வேண்டும். மூடி போட்டு சிறு தீயில் ஐந்து நிமிடம் வேகவிட்டால் உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Top Search in

Similar Recipes