விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
விரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
8 பேர்
  1. 2 கப்பதப்படுத்திய அரிசி மாவு
  2. 1/2 கப்க.பருப்பு
  3. 1/4 கப்உ.பருப்பு
  4. 1/4 கப்து.பருப்பு
  5. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  6. 12சி.மிளகாய்
  7. 3ப.மிளகாய்
  8. தாளிக்க:-
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1 ஸ்பூன்உ.பருப்பு
  11. 1 ஸ்பூன்க.பருப்பு
  12. 1 ஆர்க்குகருவேப்பிலை
  13. 2டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  14. ருசிக்குகல் உப்பு
  15. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  16. 4 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், தண்ணீர், உப்பு, எண்ணெய் விட்டு நன்கு கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, அரிசி மாவை கொட்டி, கட்டி தட்டாமல்,சுருண்டு, ஒட்டாமல் வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, ஆற விடவும்.

  3. 3

    மூன்று பருப்புகளை யும், சுத்தம் செய்து,சி.மிளகாய் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    பிறகு தண்ணீரை வடிய வைத்து, உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த மாவை போட்டு உதிரியாக வதக்கி, தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    வேக வைத்து ஆறின அரிசி மாவை கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, சிறுசிறு உருண்டைகளாக தட்டில் உருட்டிக் கொள்ளவும்.

  7. 7

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தண்ணீர், எண்ணெய், விட்டு கொதித்ததும், உருட்டின உருண்டைகளை போட்டு, 5 நிமிடம் வெந்து உருண்டைகள் மேலே வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  8. 8

    தண்ணீரை வடித்து விட்டு, உருண்டைகளை தட்டில், போட்டு ரன்னிங் வாட்டரில் காண்பித்து, வடிய விடவும்.

  9. 9

    அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, சிவந்ததும், நறுக்கின, ப.மிளகாய், கருவேப்பிலையை தாளிக்கவும்.

  10. 10

    தாளித்ததும்,அரைத்த பருப்பு, பெருங்காயத் தூளை போட்டு கிளறவும்.

  11. 11

    கிளறினதும், வெந்த உருண்டைகளை போட்டு உருண்டை உடையாமல் மெதுவாக கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.

  12. 12

    பிறகு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை யை போட்டு ஒன்று சேர கிளறி, இறக்கவும்.

  13. 13

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.இப்போது சுவையான, வித்தியாசமான,*அம்மணி கொழுக்கட்டை* தயார்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes