தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#kj

தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
10 பேர் தலா 2 பரிமாறுவது
  1. 1&1/2 கப் மைதா மாவு
  2. 1/2 கப் +3 டேபிள் ஸ்பூன் உலந்த தேங்காய் பொடி
  3. 3/4 கப் சர்க்கரை
  4. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  6. 2டீஸ்பூன் பால்
  7. 1/4 டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு,பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். உலந்த தேங்காய் பொடியை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌல் எடுத்து அதில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  3. 3

    அத்துடன் சலித்து வைத்துள்ள மைதா மாவை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் கையால் நன்கு பிசைந்து விடவும்.

  4. 4

    தேவைப்பட்டால் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.நான் பால் சேர்க்கவில்லை.

  5. 5

    பின்னர் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை ஒரே சமமாக எடுத்து, உருட்டி, நடுக்கையில் வைத்து அழுத்தி ஒரு பட்டர் பேப்பர் மேல் வைக்கவும்.

  6. 6

    அதன் பின் தேங்காய் பொடியில் பிரட்டி ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

  7. 7

    பின்னர் ஏர் பிரையரை 180 டிகிரி செல்சியஸ் வைத்து எட்டு நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து பன்னிரண்டு நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் தேங்காய் குக்கீஸ் தயார்.

  8. 8

    இப்போது மிகவும் சுவையான, கிரிஸ்பியான தேங்காய் பிஸ்கட் அருமையான சுவையுடன் ருசிக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes