ரசமலாய்(rasmalai recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#ATW2 #TheChefStory
ஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

ரசமலாய்(rasmalai recipe in tamil)

#ATW2 #TheChefStory
ஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 1 1/2 லிட்டர் பால்
  2. 3 டம்ளர் சர்க்கரை
  3. 4 பாதாம் பருப்பு
  4. 4 முந்திரி பருப்பு
  5. 4 பிஸ்தா
  6. 2 ஸ்பூன் மைதா மாவு
  7. 8-10 குங்குமப்பூ
  8. 1 எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்

  2. 2

    காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும்

  3. 3

    திரிந்த பாலை வடிகட்டி தண்ணீர் விட்டு அலசவும் பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மைதா போட்டு நன்றாக பிசையவும்

  4. 4

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி அதை உள்ளங்கையில் வைத்து அமுற்றி இந்த வடிவத்தில் கொண்டு வரவும்

  5. 5

    ஒன்றரை டம்ளர் சக்கரைக்கு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும் பிறகு திருப்பி போட்டு மறுபடியும் ஒரு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும்

  6. 6

    திரும்ப 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் சிறிதளவு எடுத்து அதில் குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விடவும்

  7. 7

    பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை அதில் போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும் பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு பிஸ்தாவை பொடி பொடியாக நறுக்கி அதில் கலக்கவும்

  8. 8

    பிறகு நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்ததை எடுத்து இந்த பால் கலவையில் போட்டு இறக்கவும் ரசமலாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes