சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#KS - Onam Special
ஓணம் சாப்பாட்டிற்கு நிறைய வகை வகையான சமையல் செய்வது வழக்கம் .. அதில் ரொம்ப பிரதானமான ஓன்று எரிச்சேரி...சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட கூடிய அருமையான கேரளா எரிச்சேரி செய்முறை...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
4 பரிமாறுவது
  1. 1 கப் சின்னதா நறுக்கின சேனை கிழங்கு
  2. 1/2 கப் காராமணி (பெரும் பயறு)
  3. 1 கப் தேங்காய் துருவல்
  4. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 2 பச்சைமிளகாய்
  8. 1 ஸ்பூன் சீரகம்
  9. 1 ஸ்பூன் கடுகு
  10. 10 சின்ன வெங்காயம்
  11. 4 பல் பூண்டு
  12. தேவைக்குஉப்பு கருவேப்பிலை
  13. 1டேபில் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் சேனை கிழங்கை தோல் சீவி கொஞ்சம் பெரிய க்யூபாக கட் செய்துக்கவும், காராமணியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு, பிறகு ஸ்டவ்வில் குக்கர் வைத்து காராமணி, சேனை கிழங்கு சேர்த்து முழுகும் அளவு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வேக விட்டு எடுக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு,4 சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.

  3. 3

    நன்கு வேக வைத்த சேனை கிழங்கு காரமணியுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவையான உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடடு ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்

  4. 4

    ஸ்டவ்வில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து அத்துடன் மீதி இருக்கும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    வெங்காயம் ஒரு விதம் வதங்கியதும் அத்துடன் மீதி தேங்காய் துருவல் சேர்த்து சிவக்க வறுக்கவும்

  6. 6

    கடைசியாக சிவக்க வறுத்த தேங்காய் தாளிப்பை எரிச்சேரியில் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான தேங்காய் எண்ணெய் வாசமுடன் ருசியான சேனை காராமணி எரிச்சேரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes