ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#PJ
ஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது.

ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)

#PJ
ஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பேர்
  1. 1/2 கப் நைலான் ஜவ்வரிசி
  2. 1/2 கப் சேமியா
  3. 1 லிட்டர் பால்
  4. 1 கப் சர்க்கரை
  5. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  7. விழுது அரைப்பதற்கு:
  8. 3டேபிள் ஸ்பூன் பாதாம்
  9. 2 டேபிள் ஸ்பூன் முந்திரி
  10. 1 டேபிள் ஸ்பூன் கசகசா
  11. நட்ஸ் வறுப்பதற்கு:
  12. 2டேபிள் ஸ்பூன் நெய்
  13. 1 டேபிள் ஸ்பூன் முந்திரி
  14. 2 டேபிள் ஸ்பூன் திராட்சை

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

  2. 2

    பின்னர் அத்துடன் வறுத்த சேமியாவை சேர்த்து கலந்து, பால் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.

  3. 3

    அத்துடன் பால் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  4. 4

    அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

  5. 5

    ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி,பாதாம், கசகசா கால் கப் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  6. 6

    குங்குமப்பூவை கொஞ்சம் பாலில் ஊற வைத்து தயாராக வைக்கவும்.

  7. 7

    சர்க்கரை சேர்த்து வேகும் ஜவ்வரிசி, சேமியாவில் அரைத்து வைத்துள்ள நட்ஸ் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  8. 8

    அத்துடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வேக விடவும்.

  9. 9

    ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  10. 10

    பாலில் ஊறவைத்துள்ள குங்குமப்பூ, வறுத்த முந்திரி திராட்சையை தயாரான பாயாசத்தில் சேர்த்து கலந்து விடவும்.

  11. 11

    பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

  12. 12

    இப்போது மிகவும் சுவையான,நட்ஸ் அரைத்து சேர்த்து செய்ததால் மிகவும் கிரீமியாக ஜவ்வரிசி சேமியா கிரீமி பாயாசம் அருமையான சுவையுடன் ருசிக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes