எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  1. 1 கப் கேழ்வரகு மாவு
  2. 1/2கப் மைதா மாவு
  3. 1கப் சர்க்கரை பவுடர்
  4. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/3கப் எண்ணெய்
  7. 1/2கப் பால்
  8. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. 1 டீஸ்பூன் வினிகர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கேழ்வரகு மாவு,மைதா மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா எல்லாம் எடுத்து சலித்து வைத்துக் கொள்ளவும்.(Store bought)

  2. 2

    எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து விஸ்க் வைத்து நன்கு பீட் செய்யவும். அத்துடன் வெனிலா எசன்ஸ்,எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் தயாராக வைத்துள்ள கேழ்வரகு,மைதா மாவு கலவையை சேர்த்து, பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

  5. 5

    கடைசியாக வினிகர் சேர்த்து நன்றாக கலந்து விருப்பப்பட்ட கேக் மோல்டில் பட்டர் பேப்பர் வைத்து கேழ்வரகு கேக் மாவுக்கலவையை ஊற்றவும்.

  6. 6

    பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரி வைத்து பதினைந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து நாற்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான கேழ்வரகு கேக் தயார்.

  7. 7

    தயாரான கேக்கை நன்கு ஆறியவுடன் டீமோல்டு செய்து,விருப்பப்படி துண்டுகள் போடவும்.

  8. 8

    இப்போது மிகவும் சத்தான, மிருதுவான, சுவையான கேழ்வரகு கேக் சுவைக்கத்தயார்.

  9. 9

    குறிப்பு:
    1.இந்த கேக் செய்ய கொஞ்சம் அதிகம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
    2.பேக் செய்யும் நேரமும் கொஞ்சம் அதிகம் எடுக்கும்.
    3. வினிகர் கடைசியாக சேர்க்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes