*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CH
இந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பேர்
  1. 2 பீஸ்ஹக்கா நூடுல்ஸ்
  2. 5 ஸ்பூன்எண்ணெய்
  3. 1பெரிய சைஸ் கேரட்
  4. 1/4 பகுதிகோஸ்
  5. 1மீடியம் சைஸ் ப. குடமிளகாய்
  6. 2 டேபிள் ஸ்பூன்நறுக்கின செலரி தண்டுகள்
  7. 1 1/2ஸ்பூன்சோயா சாஸ்
  8. 2 ஸ்பூன்சி.மிளகாய் விழுது
  9. 2 டீ ஸ்பூன்மிளகு தூள்
  10. ருசிக்குஉப்பு
  11. தேவையான அளவுதண்ணீர்
  12. அலங்கரிக்க:- காய்கறி துண்டுகள், செலரி இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை சுத்தம் செய்து, சற்று பெரியதாக நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும்.

  2. 2

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தண்ணீர், எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு, நன்கு கொதித்ததும், நூடுல்ஸை போடவும்.

  3. 3

    பிறகு 5 நிமிடம், குழையாமல் வெந்ததும் வடிகூடையில் போட்டு வடியவிடவும்.

  4. 4

    வடியவிட்டதும், தட்டிற்கு மாற்றி, மேலே ஒட்டாமல் வர 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு குலுக்கிக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை ஹையில் வைத்து, கடாயில்,2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும்,கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அடுத்து நறுக்கின, கோஸ், குடமிளகாய், செலரி, ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  7. 7

    சி. மிளகாயை சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  8. 8

    காய்கறிகள் 1/2 பாகம் வதங்கியதும், மிளகாய் விழுது, சோயா சாஸ் மிளகு தூள், சேர்த்து வதக்கவும்.

  9. 9

    பிறகு நூடுல்ஸை சேர்த்து, ஒன்று சேர நூடுல்ஸ் உடையாமல் கலந்து, 3/4 பாகம் காய்கறிகள் வெந்ததும் அடுப்பை நிறுத்தி இறக்கி விடவும்.

  10. 10

    இறக்கியதும், பிளேட்டிற்கு மாற்றவும்.

  11. 11

    பிளேட்டை சுற்றி, காய்கறி துண்டுகள், செலரி இலைகளை வைத்து அலங்கரிக்கவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*செஷ்வான் வெஜ் ஹக்கா நூடுல்ஸ்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  12. 12

    குறிப்பு:- அடுப்பை ஹையில் வைத்து, காய்கறிகளை 3/4 பாகம் வதக்கி, வேகவிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes