கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#SF - பொரித்த உணவுகள்
உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65...

கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)

#SF - பொரித்த உணவுகள்
உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
6-8 பரிமாறுவது
  1. 1- உருளை கிழங்கு
  2. 1- கத்திரிக்காய்
  3. 1 - குடமிளகாய்
  4. 1 - வெங்காயம்
  5. 2 - பச்சை மிளகாய்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1- டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1/2 கப் கடலை மாவு
  11. 1/2 கப் சோள மாவு
  12. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  13. உப்பு, கருவேப்பிலை
  14. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் எல்லா காய்களையும் நன்கு கழுகி பிறகு சிறு துண்டாக நறுக்கி வைத்துக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் நன்கு சேர்த்து கலந்துக்கவும்

  3. 3

    அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் காய்கள், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொஞ்சமாக தண்ணி தெளித்து நன்கு பிசைந்துக்கவும்,

  4. 4

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மிதமான சூட்டில் வைத்து காய்கறி மாவை எடுத்து சிறுது சிறுதாக் எடுத்து போடவும்

  5. 5

    இரண்டு பக்கவும் நன்கு வெந்து சிவந்து மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். சுவையான, ஆனால் வித்தியாசமான அருமையான கதம்ப காய்கறி -65 தயார்.....மிக டே ஸ்டியான ஒரு டீ டைம் ஸ்னாக்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes