மாங்காய் பச்சடி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#2
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி

மாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மாங்காய் தோல் நீக்கி சீவியது - 2 கப்
  2. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
  4. மிளகாய் வத்தல் - 3
  5. தேங்காய் சில் - இரண்டு
  6. சீரகம் - 1/
  7. நாட்டுச் சர்க்கரை. - 1/2 கப்
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  10. கடுகு, உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீவிய மாங்காய், மஞ்சள் பொடி, அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்கவும்.

  2. 2

    மிளகாய் வத்தல், சீரகம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  3. 3

    வேக வைத்த மாங்காயுடன் உப்பு, நாட்டுச் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

  4. 4

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes