பால் பவுடர் பர்ஃபி

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#book
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
மிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !!

பால் பவுடர் பர்ஃபி

#book
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
மிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் பால் பவுடர்
  2. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  3. 1/4 கப் நெய்
  4. 1/4 கப் காய்ச்சிய பால்
  5. நறுக்கிய பாதாம், பிஸ்தா
  6. 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கவும்

  2. 2

    பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.

  3. 3

    அந்த கலவையில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். இப்பொழுது நீர் விடும்.. நன்றாக கிளறி விடவும்

  4. 4

    கலவை திக்கான உடன் கை விடாமல் கிளற வேண்டும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  5. 5

    கலவை ஒரு சேர திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்

  6. 6

    ஒரு நெய் தடவிய தட்டில் அதை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி அதன் மீது நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவவும்

  7. 7

    சுவையான சுலபமான பால் பவுடர் பர்ஃபி தயார்..குளிர்ந்த பின் துண்டுகளாக்கி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raihanathus Sahdhiyya
அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

Similar Recipes