பள்ளி வாசல் நோன்பு கஞ்சி

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai

இஸ்லாமிய இல்லங்களில் நோன்புகலத்தில் செய்யும் அருமையான் அரிசி பருப்பு சேர்த்த கறி கஞ்சி. பள்ளிவாசல்களில் செய்வது போல அருமையான் நோன்பு கஞ்சி

பள்ளி வாசல் நோன்பு கஞ்சி

இஸ்லாமிய இல்லங்களில் நோன்புகலத்தில் செய்யும் அருமையான் அரிசி பருப்பு சேர்த்த கறி கஞ்சி. பள்ளிவாசல்களில் செய்வது போல அருமையான் நோன்பு கஞ்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
16 நபர்களுக்கு
  1. பாஸ்மதி அரிசி நொய் - 2 கப்
  2. லேசாக வறுத்த பாசி பருப்பு - 50 கிராம்
  3. கடலை பருப்பு - 2 மேசைகரண்டி
  4. கேரட் நீளவாக்கில் அரிந்தது - 1/2 கப்
  5. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி - ஒன்று
  7. பூண்டு = 6 பல்
  8. தாளிக்க
  9. ***********
  10. மட்டன் கீமா - கால் கிலோ
  11. எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
  12. பட்டை - ஒரு சிறிய துண்டு
  13. பொடியாக அரிந்த வெங்காயம் - 2
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
  15. கொத்துமல்லி தழை - சிறிது
  16. புதினா சிறிது
  17. பச்ச மிளகாய் - 2
  18. தயிர் - 2 மேசைகரண்டி
  19. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  20. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  21. தேங்காய் பால் - 2 கப்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    நொய் அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
    வாயகன்ற பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊறவைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து வேகவிடவும். மேலும் அதில் பொடியாக அரிந்த கேரட், வெங்காயம், பொடியாக அரிந்த பூண்டு,தக்காளி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும், அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.

  2. 2

    தனியாக இன்னொரு பேனில் எண்ணை, நெய் காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வெங்காயம், சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அடுத்து கொத்துமல்லி புதினா கேரட், கீமா, சேர்த்து வதக்கி வேகவைக்கவும், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்,அடுத்து தயிர்,பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் வேகவைக்கவும்.

  4. 4

    வெந்ததும் கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
    கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும். சுவையான பள்ளி வாசல் நோன்பு கஞ்சி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes