உன்னியப்பம்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக்.

உன்னியப்பம்

உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 2 கப்பச்சரிசி
  2. 1 1/4 கப்வெல்லம்
  3. 3/4 கப்தண்ணீர்
  4. 2வாழைப்பழம்
  5. 1 தேக்கரண்டிகோதுமை மாவு(விருப்பபட்டால்)
  6. 2 தேக்கரண்டிநெய்
  7. 1/8 கப்தேங்காய் துண்டுகள்
  8. 2 தேக்கரண்டிஎள்
  9. 5ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.வெல்லத்தை உருக்கி பாகு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரிசியில் தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் வாழைப்பழம்,கோதுமை மாவு,ரவை,சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் வெல்லபாகை சேர்த்து கலக்கி வைக்கவும்.

  3. 3

    கரைத்த மாவினை 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.

  4. 4

    கடாயில் நெய் ஊற்றி தேங்காய்த்துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  5. 5

    மாவில் வறுத்த தேங்காய்த்துண்டுகள்,எள்ளு,ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    ஸ்டவில் ஆப்ப கடாய் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி (உட்புறம்) மாவை ஊற்றவும்.மற்றொரு அடுப்பில் பேனில் எண்ணெய் ஊற்றவும். (சீனசட்டி)

  7. 7

    மிதமான தீயில் வைத்து செய்யவும்.ஒரு புறம் வெந்ததும் (ஆப்ப சட்டியின் வட்ட வடிவம் முழுவதும் ஊற்றவும்)

  8. 8

    மற்ற கடாயிற்கு திருப்பி (மாற்றி) போட்டு பொன்னிறமாகும் வரை பிரை பண்ணவும்.

  9. 9

    எண்ணெயை வடிய விட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes