கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு

கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. கஞ்சி:
  2. 1 கப்கேரளா மட்டா அரிசி
  3. 4-5 கப்தண்ணீர்
  4. 1/2 தேக்கரண்டிஉப்பு
  5. 1 தேக்கரண்டிநெய்
  6. பயறு தோரண்:
  7. 1/2 கப்பச்சை பயறு
  8. 3பச்சை மிளகாய்
  9. 1 கொத்துகறிவேப்பிலை
  10. 1 தேக்கரண்டிதேங்காய் எண்ணெய்
  11. 1 தேக்கரண்டிகடுகு
  12. 1/2 தேக்கரண்டிஉழுந்தபருப்பு
  13. 5--6சின்ன வெங்காயம்
  14. 1/8 கப்துருவிய தேங்காய்
  15. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  16. 1 தேக்கரண்டிஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கஞ்சி செய்வதற்கு:குருணை அரிசியை கழுவி குக்கரில் 12-13 விசில் விட்டு வேக விடவும்.

  2. 2

    பயறு தோரண்:பச்சை பயறை 6 விசில் விட்டு வேக விடவும்.

  3. 3

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உழுந்த பருப்பு பொறிய விடவும்.

  4. 4

    பிறகு அதில் கறிவேப்பிலை,பச்சைமிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  5. 5

    பிறகு அதில் வேக வைத்த பச்சை பயறு,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.

  6. 6

    அதில் துருவிய தேங்காய் சேர்த்து 2--3 மூன்று நிமிடம் வேக விடவும்.

  7. 7

    பரிமாற:ஒரு பவுலில் கஞ்சியை ஊற்றி,நெய் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.பப்பட்டுடன் சுவைக்கலாம்,பச்சை பயறு தோரண்/தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes