நாட்டுக்கோழி சூப்

Kp
Kp @cook_17567908

#தமிழர்களின் உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 1/2கிலோ நாட்டுக்கோழி கறி
  2. 10கிராம் சீரகம்
  3. 15கிராம் மிளகு
  4. 200கிராம் வெங்காயம்
  5. 1 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2லிட்டர் தண்ணீர்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. 50கிராம் குலம்பு பொடி
  9. 75மி.லி நல்லெண்ணெய்
  10. 1/4முடி நறுக்கிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு தட்டில் சின்ன வெங்காயம்,மிளகு மற்றும் சீரகத்தை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயை சூடுபடுத்தி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    2 நிமிடங்கள் வதக்கியப் பிறகு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆரவைக்கவும்

  4. 4

    பிறகு அதே கடாயில் மிளகு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்

  5. 5

    மிளகு வதங்கிய பிறகு சீரகத்தை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்

  6. 6

    மிக்சர் ஜாரை எடுத்து வதக்கிய மிளகு,சீரகம் மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்

  7. 7

    அரைத்த பொடி

  8. 8

    பின்னர் அதில் வதக்கிய வெங்காயம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்

  9. 9

    நன்கு கழுவிய கோழிக்கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  10. 10

    பின்னர் அதில் நல்லெண்ணெய் மற்றும் அரைத்து வைத்திருந்த பேஸ்டை சேர்க்கவும்

  11. 11

    சிறிது தண்ணீர் மற்றும் குலம்பு பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  12. 12

    மீண்டும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்

  13. 13

    பின்னர் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்

  14. 14

    ஒரு பாத்திரத்தை வைத்து மூடி 1/2 மணி நேரம் கொதிக்க விட்டு பின்னர் பாத்திரத்தை திறக்கவும்

  15. 15

    நறுக்கிய தேங்காய்யை சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க விடவும்

  16. 16

    பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி கறி வெந்து இருக்கிறதா என்று சரிபார்க்கவும்

  17. 17

    மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குடித்தால் ருசியான நாட்டுக் கோழி சூப் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kp
Kp @cook_17567908
அன்று

Similar Recipes