வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 3 வாழைக்காய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2மேசைக்கரண்டி அரிசி மாவு
  5. தேவையானஅளவு உப்பு
  6. தலா 1 மேசைக்கரண்டி நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி
  7. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காய் காம்பு, அடிப்பகுதி நீக்கவும். இரு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

  3. 3

    வெந்த வாழைக்காயை ஆற வைத்துத் தோல் நீக்கவும்.

  4. 4

    தோல் நீக்கிய வாழைக்காயை நன்கு மசித்துக் கொள்ளவும்.

  5. 5

    மசித்த வாழைக்காயுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes