மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
ஆறு பேர்
  1. கால் கிலோபெரிய பாகற்காய்
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. இரண்டுசிறியதக்காளி
  4. தேவைக்கேற்பஎண்ணெய்
  5. கடுகு சிறிதளவு
  6. கால் டீஸ்பூன்மிளகாய் தூள்
  7. 3 ஸ்பூன் நறுக்கியதுஅரைத்துக் கொள்ள தேங்காய்
  8. அரை டீஸ்பூன்சீரகம்
  9. ஒரு பச்சை மிளகாய்
  10. இரண்டுசிறியபூண்டு பற்கள்
  11. ருசிக்கு ஏற்பஉப்பு
  12. ஒரு ஸ்பூன்தூள் செய்த வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பெரிய பாகற்காயை வட்ட வடிவமாக நறுக்கி நடுவில் உள்ள விதைகளை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் மற்றும் வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காயைஉப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக விடவும்

  3. 3

    எந்த பாகற்காயை தண்ணீரை வடித்து விட்டு தனியே வைத்துக் கொள்ளவும் இன்னொரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பொரிந்த விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்

  4. 4

    வெங்காயம் தக்காளி கலவையை நன்கு கிளறிவிட்டு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்கவும்உப்பு சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்

  5. 5

    கிளறிய பின் பாகற்காயை அதில் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும் ஐந்து நிமிடங்கள் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்

  6. 6

    இப்பொழுது சாம்பார் சாதம் தயிர் சாதம் எல்லா சாத வகைகளுடன் சாப்பிட அருமையான மசாலா பாகற்காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes