கும்பகோணம் கடப்பா

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கும்பகோணம் கடப்பா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  2. 1சோம்பு 1பட்டை 1பிரிஞ்சி இலை
  3. 1 வெங்காயம்
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1 தக்காளி
  6. 1 வேகவைத்த உருளைக்கிழங்கு
  7. 1/2 கப் வேகவைத்த பாசிப்பருப்பு
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. 1/2 எலுமிச்சை பழம்
  11. கொத்தமல்லி இலை
  12. விழுதாக அரைக்க:-
  13. 1/2கப் தேங்காய்
  14. 1/2டீஸ்பூன் சோம்பு
  15. 1டீஸ்பூன் கசகசா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை& பிரிஞ்சி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு அரிந்த பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    தக்காளி வதங்கியதும் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு, வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி,தேவைக்கேற்ப உப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.

  3. 3

    ஒரு கொதி வந்ததும் தேங்காய், சோம்பு & கசகசா சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    மிதமான தீயில் கொதிக்கவைத்து பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொத்தமல்லி இலை தூவி சூடான இட்லியுடன் பரிமாறவும். சுவையான கும்பகோணம் கடப்பா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes