பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.
#pongal2022

பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)

எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.
#pongal2022

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ பிடிகருணை
  2. 2 பச்சை மிளகாய்
  3. 5சின்ன வெங்காயம்
  4. 1 1/2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  5. 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. சிறிய எலுமிச்சை பழ அளவுபுளி
  7. சிறிதளவுதேங்காய் பூ
  8. தேவையான அளவுஉப்பு
  9. தாளிப்பதற்கு
  10. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. 1 டேபிள் ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  12. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிடி கருணையை போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை தோலுரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி மசித்து வைத்த கிழங்கையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் புளிக்கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வேக வைத்து தேங்காய் பூவை தூவி இறக்கினால் சுவையான பிடிகருணை மசியல் தயார். இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes