சுவரொட்டி / மண்ணீரல் ஃப்ரை 😋🤤(manneeral fry recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

இரத்த சோகை உள்ளவர்களுக்கு சுவரொட்டி ஒரு அருமருந்து . மகப்பேறு பெண்களுக்கும் , மாதவிடாய் கோளாறு உள்ள பெண்களுக்கும் கூட இந்த மண்ணீரல் மிகவும் சிறந்த மருந்தாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

#9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. 1மண்ணீரல்
  2. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4 ஸ்பூன் மல்லி தூள்
  4. சிறிதளவுமஞ்சள் தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  7. 1வெங்காயம்
  8. 2 ஈர்க்கு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஆட்டு மண்ணீரல் மீது உள்ள ஜவ்வை வெட்டி எடுத்துவிட வேண்டும். இரும்பு கல்லில் செய்தால் இன்னும் அதிக பலன் கொடுக்கும்.

  2. 2

    இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் சுவரொட்டியை வைத்து மூடி போட்டு இரண்டு பக்கமும் இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும்.

  3. 3

    முக்கால் பதம் வெந்தாலே போதும்.

  4. 4

    இப்போது கத்தியை வைத்து துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  5. 5

    அதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தனியாத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கடைசியாக வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்

  6. 6

    இப்போது நமது சுவரொட்டி ஃப்ரை தயார் கடையில் கிடைப்பது போலவே மிகவும் சுவையாக இருக்கும் நீங்களும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள். 😋🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes