சுரைக்காய் உருண்டை குழம்பு (Suraukkaai urundai kulambu recipe in tamil)

சுரைக்காய் உருண்டை குழம்பு (Suraukkaai urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய் -ஐ தோல் நீக்கி துருவி எடுக்கவும். தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, சோளமாவு சேர்த்து பிசையவும்.உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் 1/4டீஸ்பூன் மிளகாய் தூள் 1/4டீஸ்பூன் கரம்மசாலா தூள், 1/4டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,ஓமம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள சுரைக்காய் கலவையை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பின் அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு,பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- 5
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லிதழை புதினா சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள், சேர்த்து கிளறவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்க்கவும்.
- 7
நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த உருண்டைகளை சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும்.சாதத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
- வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
- மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
- Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)
- வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)



கமெண்ட்