சுரைக்காய் உருண்டை குழம்பு (Suraukkaai urundai kulambu recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

சுரைக்காய் உருண்டை குழம்பு (Suraukkaai urundai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 சிறிய அளவு சுரைக்காய் (தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும்)
  2. 2பச்சைமிளகாய்
  3. 2வெங்காயம்
  4. 1ஸ்பூன் இஞ்சிபூண்டுவிழுது
  5. 1டீஸ்பூன் சோம்பு
  6. 3தக்காளி(பொடியாக நறுக்கியது)
  7. 1/4கப் தேங்காய்ப்பால்
  8. 1பட்டை
  9. 1ஏலக்காய்
  10. 1கிராம்பு
  11. 1பிரிஞ்சிஇலை
  12. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1/4டீஸ்பூன் மல்லித்தூள்
  14. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1/4டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  16. தேவைக்கேற்ப உப்பு
  17. சிறிதளவுகொத்தமல்லிதழை
  18. சிறிதளவுபுதினா
  19. எண்ணெய்
  20. 1ஸ்பூன் கடலை மாவு
  21. 1ஸ்பூன் அரிசி மாவு
  22. 1ஸ்பூன் சோளமாவு
  23. 1/4டீஸ்பூன் ஓமம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுரைக்காய் -ஐ தோல் நீக்கி துருவி எடுக்கவும். தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, சோளமாவு சேர்த்து பிசையவும்.உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் 1/4டீஸ்பூன் மிளகாய் தூள் 1/4டீஸ்பூன் கரம்மசாலா தூள், 1/4டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,ஓமம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள சுரைக்காய் கலவையை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பின் அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு,பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

  5. 5

    நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லிதழை புதினா சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள், சேர்த்து கிளறவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த உருண்டைகளை சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும்.சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes