களியாகறி..! (Sri Lankan Kaliya Curry)

Fma Ash
Fma Ash @cook_20061862

இலங்கையில் களியாகறி மிகவும் பிரபலமான உணவாகும். நெய் சோற்றுடன் சாப்பிட்டால், ருசியோ ருசி. இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகையாகவும் சமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள செய்முறைக்கு சிக்கன் லிவர் (ஈரல்) சேர்த்து செய்யவது அசைவ முறையாகும்.
#goldenapron3

களியாகறி..! (Sri Lankan Kaliya Curry)

இலங்கையில் களியாகறி மிகவும் பிரபலமான உணவாகும். நெய் சோற்றுடன் சாப்பிட்டால், ருசியோ ருசி. இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகையாகவும் சமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள செய்முறைக்கு சிக்கன் லிவர் (ஈரல்) சேர்த்து செய்யவது அசைவ முறையாகும்.
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
03 நபர்கள்
  1. 1 கத்தரிக்காய்
  2. 1 வாழைக்காய்
  3. எண்ணெய் [பொரிப்பதற்கு தேவையானளவு]
  4. 3 ஸ்பூன் எண்ணெய்
  5. 1டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. 1வெங்காயம் [சிறியது]
  8. 1தக்காளி [சிறியது]
  9. 2 பச்சைமிளகாய்
  10. தேவையானளவு உப்பு
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  12. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  13. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  14. 4 ஸ்பூன் கட்டியான தேங்காய்ப்பால் [தலைப்பால்]
  15. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  16. (டீஸ்பூன் = தேக்கரண்டி)

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காய் மற்றும் வாழைக்காய் ஆகியவற்றை தனித்தனியாக 1'' அளவு சதுர வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    # டிப்ஸ் : வாழைக்காய் நிறம் மாறாமல் இருக்க, எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை சக்கையை தண்ணீரில் கலந்து, அதற்குள் வாழைக்காயை சேர்த்து வையுங்கள்.

  2. 2

    சிறிதளவு உப்பு சேர்த்து கத்தரிக்காய் மற்றும் வாழைக்காயை தனித்தனியாக பொரித்துக் கொள்ளவும்.
    [ஏனெனில், இரண்டும் பொரிவதற்கு எடுக்கும் நேரம் வேறுபட்டது. கத்தரிக்காய் விரைவாக கருகி விடும்]

    * இலேசாக பொரித்தால், போதுமானது. டீப் ப்ரை செய்ய வேண்டாம்.

  3. 3

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு கறிவேப்பிலை, வெங்காயம்,
    தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பின்பு பொரித்து வைத்த, கத்தரிக்காய் மற்றும் வாழைக்காய் என்பவற்றை சேர்க்கவும்.

  4. 4

    அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

    * இறுதியாக கட்டியான தேங்காய்ப்பால் விட்டு, 2 நிமிடங்கள் வேக விடவும்.

  5. 5

    அவ்வளவுதான் சூப்பரான களியாகறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes