சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பசலைக் கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயம் மற்றும் பசலைக் கீரையை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தணலில் வைத்து வதக்கவும். அவை ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும். கடைசியாக துருவிய பனீரை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
தயார் செய்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
- 4
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அத்துடன் கிராம்பு,பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் 2 தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் இவற்றை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அத்துடன் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 6
மசாலாவின் பச்சை வாசனை நீங்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து பொறித்து வைத்த கோப்த்தாக்களை கிரேவியில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான தனலில் கொதிக்கவிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
-
-
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட்