கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#nutrient1
புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம்

கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)

#nutrient1
புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. தேவையான அளவு கொண்டைகடலை
  2. 1 கப் வடித்த சாதம்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1டீஸ்பூன் துருவிய இஞ்சி
  6. சிறிது கறிவேப்பிலை,மல்லி
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  10. 1டீஸ்பூன் கடுகு
  11. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  12. 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  13. 4 முந்திரி பருப்பு (விருப்பப்படி)
  14. 1/2 மூடி எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைகடலையை பத்து மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து பின் முளைகட்டி கொள்ளவும்.இதை குக்கரில் தண்ணீர் விட்டு வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை, முந்திரி தாளிக்கவும்

  3. 3

    பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்த சாதம் மற்றும் வேக வைத்த கொண்டைகடலை சேர்த்து கிளறி இறக்கவும்

  5. 5

    எலுமிச்சை சாற்றை கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes