போர்பன்  கேக் (Bourbon cake recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.
#family

போர்பன்  கேக் (Bourbon cake recipe in tamil)

குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.
#family

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட்போர்பன் பிஸ்கட்
  2. ஒரு ஸ்பூன்பேக்கிங் சோடா
  3. 2 ஸ்பூன்மைதா மாவு
  4. தேவைக்கு ஏற்பபால்
  5. ஒரு பாக்கெட்டைரி மில்க் சாக்லெட்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    போர்பன் பிஸ்கட் எடுத்து மிக்ஸி ஜாரில் நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்து எடுத்த பவுடரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, மைதா மாவு 2 ஸ்பூன், தேவைக்கு ஏற்ப பால் கலந்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு பீட் செய்த பிறகு ஒரு பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் நாம் அடித்து வைத்த கலவையை ஊற்றவும். பிறகு குக்கரில் உப்பு போட்டு அதன் மீது நாம் வைத்த கலவையை வைக்கவும்.

  4. 4

    35 முதல் 40 நிமிடங்கள் வரை கேக்கை பேக் செய்ய வேண்டும்.அதன்பிறகு கேக் நல்ல ஆறியவுடன் ஒரு தட்டில் மாற்றவும்.ஒரு டைரி மில்க் சாக்லெட்டை எடுத்து அடுப்பில் வைத்து தேவையான அளவு பால் ஊற்றி நன்கு மெல்ட் செய்யவும்.நன்கு க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் கேக்கின் மேல் பகுதியில் இந்த கிரீமை தடவவும். இப்பொழுது சுவையான போர்பன் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes