ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#nutrient3

ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)

#nutrient3

ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/4கிலோ ஆட்டு ஈரல் மற்றும் சுவரொட்டி
  2. 2 பெரிய வெங்காயம் அல்லது 30 சின்ன வெங்காயம்
  3. 1கொத்து கருவேப்பிலை
  4. 1பச்சை மிளகாய்
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 2ஸ்பூன் சீரகத்தூள்
  9. 2ஸ்பூன் எண்ணெய்
  10. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஈரலை சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.

  2. 2

    பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். தேவை எனில் லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

  3. 3

    பின்னர் மூடி 5நிமிடம் வேக வைக்கவும். இடை இடையே கிளறி விடவும். ஈரல் நன்கு வெந்து அளவில் சுருங்கி வந்த உடன் அடுப்பை அணைத்து விடலாம். சுவையான ஈரல் வறுவல் ரெடி. குறிப்பு இதில் மிளகு தூள் சேர்க்க கூடாது. சீரகத்தின் சுவை மாறி விடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes