செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. செஷ்வான் சாஸ் செய்வதற்கு
  2. 6வரமிளகாய்
  3. சிறிதளவுஇஞ்சி
  4. 3 பல்பூண்டு
  5. ஃப்ரைட் ரைஸ் செய்வதற்க்கு
  6. ஒன்றுபெரிய வெங்காயம்
  7. 2 பல்பூண்டு
  8. சிறிதளவுகேரட்
  9. சிறிதளவுபீன்ஸ்
  10. சிறிதளவுகேப்ஸிகம்
  11. சிறிதளவுபெப்பர் தூள்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும்.

  2. 2

    செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு பெரிய வெங்காயம் கேரட் பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    கேரட் பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய கேப்சிகம் சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு பெப்பர் தூளை சேர்த்துக் கொள்ளவும். முன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறவும்.கிளறிய பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான சேஷ்வான் ப்ரைடு ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes