ராகி (கேழ்வரகு)அடை #breakfast

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம்.

ராகி (கேழ்வரகு)அடை #breakfast

காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
10 நபர்களுக்கு
  1. 500 கிராம் ராகி மாவு
  2. 2 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 50 கிராம் வேர்க்கடலை
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. கொத்தமல்லி சிறிதளவு
  7. 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
  8. 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன்மேல் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன் சோம்பு தூள் அரை டீஸ்பூன் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பொட்டுக்கடலை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது அதில் தண்ணீர் சிறுக சிறுக ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    தவாவை அடுப்பில் வைத்து சூடான பிறகு இந்த மாவை உருட்டி தவாவில் வைத்து தட்டி நன்றாக ஒரு இரண்டு நிமிடம் வேகவைத்து பிறகு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு கிரிஸ்பியாக ஆகும் வரை வேகவைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான ராகி அடை நொடியிலேயே தயாராகிவிடும் உடம்புக்கு மிகவும் நல்லது காலை உணவாக எடுத்துக் கொள்வதற்கு ஏற்றது. ஒருமுறை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes