மட்டன் எலும்பு பெப்பர் சூப்

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#pepper
Healthy soup

மட்டன் எலும்பு பெப்பர் சூப்

#pepper
Healthy soup

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மட்டன் எலும்பு - 1/2 கிலோ
  2. சின்னவெங்காயம் - 5
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  6. சோம்புத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் - 11/2 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  10. பட்டை - 2
  11. அன்னாசிப்பூ - 1
  12. சோம்பு - 1 டீஸ்பூன்
  13. உப்பு - தேவையான அளவு
  14. கருவேப்பிலை - 1கொத்து
  15. கொத்தமல்லி இ்லை
  16. எண்ணெய் - 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மட்டன் எலும்பை, சுத்தமாக கழுவிக் கொள்ளவும்,தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்..

  2. 2

    குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,பட்டை, அன்னாசிப்பூ,சோம்பு, போட்டு வெடித்தவுடன், நறுக்கிய தக்காளி, வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை, போட்டு வதக்கவும், வதங்கியபின்,எலும்பு, இஞ்சிபூண்டு பேஸ்ட், சோம்புத் தூள்,சீரகத்தூள், மிளகுத்தூள்,போட்டு கிளறவும்.

  3. 3

    பின்னர் தேவையான அளவு உப்பு,1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,போட்டு நான்கு டம்ளர் தண்ணீர், ஊற்றவும்..பிறகு குக்கரை மூடி 6 விசில் விடவும்...

  4. 4

    குக்கரில் விசில் அடங்கியதும்,திறந்து கொத்தமல்லித்தழை,1/2 ஸ்பூன் மிளகு தூள் போட்டு பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Top Search in

Similar Recipes