பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேருக்கு
  1. 1கப் ரவை
  2. 1டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  3. 1/2கப் பொடித்த வெல்லம்
  4. 1/4டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  5. 1/2மூடி தேங்காய் துருவல்
  6. 1டேபிள் ஸ்பூன் நெய்
  7. 1சிட்டிகை உப்பு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ரவா போட்டு நெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பிறகு தேங்காய் துருவல் சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு கெட்டியாகும் வரை கிளறி பூரணம் தயார் செய்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு ரவா மாவை சொப்பு செய்து அதன் உள்ளே பூரணம் வைத்து மூடி எண்ணையில் போட்டு கோல்டன் கலரில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இது ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes