சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2hrs
3 பரிமாறுவது
  1. சோலா பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  2. 250 கிராம்,மைதா மாவு
  3. 100 மில்லி தண்ணீர்,
  4. 3 டேபிள்ஸ்பூன்,ரவை
  5. 5 டேபிள்ஸ்பூன்,தயிர்
  6. ஒரு டேபிள்ஸ்பூன்,சீனி
  7. உப்பு தேவையான அளவு,
  8. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  9. சென்னா மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  10. வெள்ளை சுண்டல் ஒரு டம்ளர்(இரவு வெள்ளை சுண்டலை நீரில் ஊறவைக்க வேண்டும்)
  11. பெரிய வெங்காயம் 4, தக்காளி-2 மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2tbsp,மிளகாய்த்தூள்2tbsp,கரம் மசாலா 1/4tbsp, உப்பு தேவையான அளவு,
  12. மல்லித்தழை தேவையான அளவு, பட்டை 2,கிராம்பு 4,சோம்பு 1/2tsp, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2hrs
  1. 1

    முதலில் மைதா மாவில் சர்க்கரை ரவை எண்ணெய் தயிர் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும் வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் விட வேண்டும்

  2. 2

    பின் கோதுமை மாவு பூரி பதம் இல்லாமல் சிறிது தண்ணியாக பிணைய வேண்டும்

  3. 3

    பிணைந்த மாவை எண்ணெய் தடவி மேலே ஈரத்துணி போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்

  4. 4

    சுண்டலை 8 லிருந்து 10 விசில் வரை வேக வைத்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மல்லி பொடி மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கவும்

  6. 6

    வதங்கியவுடன் அவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும் அதை ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்

  8. 8

    பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் அதன் வேக வைத்து நீரை ஊற்ற வேண்டும்

  9. 9

    மறுபடியும் 5 நிமிடம் வேக வைக்கவும்

  10. 10

    பின் அதில் ஒரு பகுதியை சுண்டலை மற்றும் ஒரு ஸ்மாஷர் அல்லது டம்ளர் பின் புறம் வைத்து மசித்து கொள்ளவும் அப்போது அதன் பதம் இன்னும் நன்றாக இருக்கும்

  11. 11

    2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

  12. 12

    சோலா பூரி மாவு ஊறிய பின் அதை எடுத்து நன்றாக 7-8 நிமிடம் பிசைந்து கொள்ளவும்

  13. 13

    பின் அதை கொஞ்சம் கெட்டியாக விரிக்கவும்

  14. 14

    ஓர் அகலமான பாத்திரம் எடுத்துக்கொண்டு அதில் பூரி சுடுவதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும்

  15. 15

    பின் அதில் விரித்த மாவை சேர்த்து, எண்ணெய் மேலே தெளித்து, இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shree
Shree @cook_26355102
அன்று

Similar Recipes