பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)

Delphina
Delphina @cook_26396223

பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பன்னீர் மசாலா மட்டும் செய்ய 20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 1 எலுமிச்சை
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 துண்டு இஞ்சி
  6. 5-6 பல் பூண்டு
  7. 4 தேக்கரண்டியளவு எண்ணெய்
  8. 2 இலவங்கம
  9. 1 ஏலக்காய்
  10. 1சிறு துண்டு பட்டை
  11. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  13. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  14. 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  15. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பன்னீர் மசாலா மட்டும் செய்ய 20 நிமிடங்கள்
  1. 1

    பாலை கொதிக்க விட்டு அதில் எலுமிசசம்பழத்தை பிழிந்து விட்டு திரிய விடவும். திரிந்ததும் ஒரு சுத்தமான வெள்ளை துணியில் போட்டு நன்கு பிழந்து எடுத்து அதை ஒரு இரவு (5 மணி நேரம்) கட்டி தொங்க விடவும். பன்னீர் தயார்

  2. 2

    வெங்காயம் இஞ்சி பூண்டு இவற்றை எண்ணெயில் வதக்கி எடுத்து அரைத்துக்கொள்ளவும். தக்காளியை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அதே எண்ணெயில் இளவங்கம், ஏலக்காய் பட்டை மற்றும் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும் இத்தோடு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். பன்னீர் துண்டுகளாக வெட்டிக் கொண்டு சேர்த்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான வீட்டில் செய்த பன்னீர் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Delphina
Delphina @cook_26396223
அன்று

Similar Recipes