வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)

#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பேர்
  1. 2பெரிய உருளைக்கிழங்கு
  2. 2 கேரட்
  3. 1/2 கப் நறுக்கிய பீன்ஸ்
  4. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு அரவை
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 ஸ்பூன் சோம்பு
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    இரண்டு உருளைக்கிழங்கையும் வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு குழி கரண்டி அளவு என்னை விட்டு அதில் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்க்கவும்.

  2. 2

    அதில் நறுக்கிய காய்கறிகள் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை. பின்பு இஞ்சி பூண்டு அரவை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காட்டில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். இறுதியாக உப்பை சேர்த்து நன்றாக சுருள சுருள கிளரவும்.

  3. 3

    கலவை நன்றாக ஆறியதும் ரஸ்க் தூள் அல்லது அரிசி மாவு எது வேண்டுமானாலும் 4 முதல் 5 ஸ்பூன் அளவு சேர்த்து சற்று கெட்டி பதம் வரும்வரை பிசைந்துகொள்ளவும். பின்பு தேவையான வடிவங்களில் வெஜிடபிள் கட்டர் ஐ பயன்படுத்தி அல்லது டப்பா முடியை பயன்படுத்தி செய்து கொள்ளவும்.

  4. 4

    இந்த வடிவங்களை தோசை கல்லில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு செய்து வைத்துள்ள வடிவங்களை அதில் இட்டு முன்புறமும் பின்புறமும் வாட்டி எடுத்து அலங்கரித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes