மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#GA4/Week 13/Mushroom

*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.

*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 400 கிராம் மஷ்ரூம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. ஒரு பச்சை மிளகாய்
  5. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு டேபிள்ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் தனியா தூள்
  8. ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. அரை கட்டு கொத்தமல்லி இலைகள்
  10. அரை கட்டு புதினா இலைகள்
  11. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  13. 300 கிராம் பாஸ்மதி அரிசி
  14. உப்பு தேவையான அளவு
  15. தாளிப்பதற்கு
  16. 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  17. 3பட்டை துண்டுகள்
  18. 2 ஏலக்காய்
  19. 4கிராம்பு
  20. 1ஜாதி பத்திரி (விருப்பட்டால்)
  21. 2பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயகத்தை நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் மற்றும் மஸ்ரூம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி புதினாவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது அரிசியை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் கமகம வாசனையுடன் மஷ்ரூம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes