தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)

Dhivya Shankar
Dhivya Shankar @cook_27661892

தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது.

தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)

தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப்தோல் உளுந்து
  2. 3 கப்தண்ணீர்
  3. ஒரு கப்வெல்லம்
  4. 150மிலிநல்லெண்ணை
  5. 4ஏல்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கப் தோல் உளுந்தை வானலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.உளுந்தின் நிறம்"சற்று நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து நன்றாக கரையும் வரை கொதிக்கவைத்து கொள்ளவும்

  3. 3

    வறுத்தஉளுந்தை மிக்சியில் கொர கொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

  4. 4

    அடுத்து ஒரு கப் நீரில் உளுந்து பொடியை கரைத்துக்கொள்ளவும்

  5. 5

    வானலியில் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்

  6. 6

    தண்ணீர் சூடானதும்கரைத்த உளுந்து கரைசலை சேர்த்து கிண்டவும்

  7. 7

    பத்து நிமிடம் கழித்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறிவிட்டு பிறகு வெல்லக்கரைசலை அதனுடன் சேர்த்துக் கிண்டவும்

  8. 8

    உளுந்து களி பதத்திற்கு வந்ததும்"அதனுடன் நல்லெண்ணை சேர்க்கவும்

  9. 9

    ஏல்காயை பொடி செய்து அதில் சேர்க்கவும்

  10. 10

    களியில் ஊற்றிய நல்லெண்ணை வெளி வரும் வரை நன்கு கிண்டிக்கொண்டே இருக்கவும்

  11. 11

    தயாரான களியை சிறிது நல்லெண்ணை மேலாக ஊற்றிபரிமாறவும்.சுவையான களி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya Shankar
Dhivya Shankar @cook_27661892
அன்று

Similar Recipes