கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)

Sarasvathi Swaminathan
Sarasvathi Swaminathan @cook_28768346

தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

27 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை
6 பேர்
  1. கடுகு.
  2. அரைமேஜைக்கரண்டிமிளகு,
  3. மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு,புளி,
  4. ஒரு மேஜை கரண்டிதுவரம் பருப்பு,
  5. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்,
  6. 5குண்டு மிளகாய்,
  7. அரை டீஸ்பூன் ஜீரகம்,
  8. உப்பு,
  9. ஒரு சிறிய கட்டிவெல்லம்,
  10. கால் மேஜை க்கரண்டி, தனியா,
  11. 100 நல்லெண்ணெய்,
  12. 3 கைப்பிடிகருவேப்பிலை,
  13. 2பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

27 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை
  1. 1

    அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு அதில் பெருங்காயத்தை போட்டு அது பொரிந்தவுடன் மிளகு, குண்டு மிளகாய், துவரம் பருப்பு, ஜீரகம்,கருவேப்பிலை, தனியா இவற்றை எல்லாம் போட்டு வதக்கவும். பிறகு புளியை கரைத்து வடிகட்டி கொள்ளவும். வதக்கிய கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து புளி கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  2. 2

    நன்கு கொதித்தவுடன் சிறிய வெல்ல கட்டி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

  3. 3

    இப்பொழுது சூடான சுவையான கருவேப்பிலை மிளகு குழம்பு ரெடி! சூடு சாதத்துடன் சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்! இட்லி, தோசை க்கு தொட்டு கொள்ளலாம்!நாக்கில் நீர் சொட்ட வைக்கும் சுவை இதற்கு உண்டு!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarasvathi Swaminathan
Sarasvathi Swaminathan @cook_28768346
அன்று

Similar Recipes