பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)

Bhagya Ramalingam
Bhagya Ramalingam @cook_28821605

#Ve

பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)

#Ve

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1hr30 min
2 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட்பனீர்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. பாதிபிரிஞ்சி இலை
  5. சிறு துண்டுபட்டை
  6. 1ஏலக்காய்
  7. ஒரு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  8. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  9. - ஒரு தேக்கரண்டிதனி மிளகாய் தூள்
  10. அரை தேக்கரண்டிசீரகத் தூள்
  11. கால் தேக்கரண்டிகரம் மசாலா தூள்
  12. சிட்டிகைகலர் பொடி
  13. கால் கப்வெண்ணெய்
  14. எண்ணெய்
  15. ஒரு தேக்கரண்டிஉப்பு

சமையல் குறிப்புகள்

1hr30 min
  1. 1

    வெங்காயம், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிவற்றை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கியவற்றை ஆற வைத்து தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    குக்கரில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது விழுதை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  4. 4

    அதில் தக்காளி விழுதை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  6. 6

    சிறிது நேரம் கழித்து பனீரை சேர்த்து கிளறவும்.குக்கரில் 1 விசில் விடவும்.சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Bhagya Ramalingam
Bhagya Ramalingam @cook_28821605
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes