பானி பூரி மசாலா

Roobha
Roobha @cook_24931100

பானி பூரி மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 2ஸ்பூன் ரவை
  3. 1 ஸ்பூன் கோதுமை மாவு
  4. பின்ச்சோடா மாவு
  5. 4உருளைக்கிழங்கு
  6. 2 வெங்காயம்
  7. 2பச்சை மிளகாய்
  8. 1 துண்டு இஞ்சி
  9. 1 ஸ்பூன் மிளகு சீரகம்
  10. 1கப் கொத்தமல்லி புதினா
  11. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. தேவைக்கு உப்பு
  13. தேவைக்கு எண்ணெய்
  14. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் மைதா மாவுடன் 2 ஸ்பூன் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து சிறிது உப்பு சோடா உப்பு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.பின்பு சப்பாத்தியாக தேய்த்து டிபன் பாக்ஸ் மூடியில் சிறு சிறு சப்பாத்தி உருண்டைகளாக கட் செய்ய வேண்டும்.

  2. 2

    எண்ணெய் காய்ந்தவுடன் சிறிய பானி பூரி பொரித்து எடுக்க வேண்டும்.பின்பு உருளைக் கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும்.பின்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலவை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.பானி ரசம் செய்ய தேவையான எடுத்துக் கொள்ளவேண்டும்.

  4. 4

    புதினா கொத்தமல்லி இஞ்சி சீரகம் பச்சை மிளகாய் மிளகு சிறிது உப்பு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் சிறிது நீர் சேர்த்து தேவையெனில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    இப்பொழுது சுவையான சத்தான வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பானி மசாலா ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes