சிக்கன் பெப்பர் செமி கிரேவி

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்

சிக்கன் பெப்பர் செமி கிரேவி

#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2பேர்கள்
  1. 250கி சிக்கன்
  2. 2ஸ்பூன் மிளகு
  3. 2ஸ்பூன் சோம்பு
  4. 1ஸ்பூன் சீரகம்
  5. 2பட்டை
  6. 4கிராம்பு
  7. 1மராத்தி மொக்கு
  8. 2பெரிய வெங்காயம்
  9. 1 கொத்து கருவேப்பிலை
  10. 1தக்காளி
  11. 1மிளகாய்த்தூள்
  12. 1ஸ்பூன் தயிர்
  13. 1/2ஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் விடாமல் கிராம்பு, மிளகு, சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, மராத்தி மொக்கு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.. சிறிது எண்ணெய் விட்டு ஒரு வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்..

  2. 2

    வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.. அதனுடன் வதக்கிய வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு கருவேப்பிலை தாளிக்கவும்.. அத்துடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.. அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக தொக்கு பதத்திற்கு வதக்கவும்

  5. 5

    அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக வதங்கிய பின் சிக்கனையும், உப்பையும் சேர்த்து வதக்கவும்..

  6. 6

    சிக்கனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும்

  7. 7

    நன்றாக கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கவும்... இப்போது சுவையான சிக்கன் பெப்பர் செமி கிரேவி தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes