திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vattaram Week14

திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil

#vattaram Week14

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
5 பேர்
  1. 2 கப் புழுங்கல் அரிசி
  2. அரை கப் கடலைப்பருப்பு
  3. அரை கப் துவரம் பருப்பு
  4. அரை கப் உளுத்தம்பருப்பு
  5. அரை கப் பாசிப்பருப்பு
  6. 5 வரமிளகாய்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
  8. 10பூண்டு பல்
  9. மூன்றுபெரிய வெங்காயம்
  10. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  11. கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி
  12. அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி
  13. 100ml சமையல் எண்ணெய்
  14. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக நன்கு அலசி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பின்பு நீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் அரிசியுடன் வரமிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு அனைத்து பருப்புகளையும் நீரை வடித்துவிட்டு பூண்டை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரிசி மற்றும் பருப்பு மாவுடன் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கலக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி 2 டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கி மாவுடன் சேர்த்து மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    நன்கு கலந்த மாவை தோசைக் கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தேவையான அளவுகளில் சற்று கனமாக தேய்த்து, சமையல் எண்ணெயை அடைகளை சுற்றி தாராளமாக ஊற்றவும். அப்பொழுதுதான் அடைகள் மொறுமொறுவென்று வரும். அடை வெந்தவுடன் திருப்பி போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். அடை சிவக்க வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது அவியல் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes