மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#2

மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

#2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  1. 1 கிலோ மத்தி மீன்
  2. 4 தக்காளி
  3. 30 சின்ன வெங்காயம்
  4. ½ மூடி தேங்காய்
  5. 2 கொத்து கருவேப்பிலை
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. சிறிதளவுபுளி
  8. 3 பச்சை மிளகாய்
  9. 10 பல் பூண்டு
  10. 1 தேக்கரண்டி கடுகு
  11. ½ தேக்கரண்டி வெந்தயம்
  12. 1 தேக்கரண்டி சீரகம்
  13. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  14. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  15. 2 தேக்கரண்டி மல்லி தூள்
  16. 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  17. உப்பு
  18. 50 மில்லி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சிறிதளவு வெங்காயம், புளி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள்,உப்பு,சேர்த்து நன்றாக அரைக்கவும்.
    பின்பு தக்காளி யும் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,சேர்த்து சீரகம், சின்ன வெங்காயம்,பூண்டு,கருவேப்பிலை,வெந்தயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின்பு அரைத்த விழுதை சேர்த்து பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

  4. 4

    பின்பு நன்றாக கொதி வந்ததும் அதில் மத்தி மீனை சேர்த்து கலக்கி விடவும்.

  5. 5

    பிறகு 5 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes