சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

சேப்பங்கிழங்கை கல்யாண வீடுகளில் மிகவும் ருசியாக செய்வார்கள் அதைப்போல நாமும் செய்யலாம் மிக மிக ருசியாக இருக்கும். #kp

சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)

சேப்பங்கிழங்கை கல்யாண வீடுகளில் மிகவும் ருசியாக செய்வார்கள் அதைப்போல நாமும் செய்யலாம் மிக மிக ருசியாக இருக்கும். #kp

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
மூன்று பேர்
  1. கால் கிலோசேப்பங்கிழங்கு
  2. மூன்று ஸ்பூன்தேங்காய் நறுக்கியது
  3. அரை டீஸ்பூன்சீரகம்
  4. கால் டீஸ்பூன்சோம்பு
  5. மூன்றுபூண்டு சிறிய பற்கள்
  6. அரை டீஸ்பூன்மிளகாய் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 200 மில்லிபொறிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து ஆரியதும் தோலை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து வைக்கவும்

  2. 2

    நறுக்கி வைத்துள்ள கிழங்குகளை எண்ணெயை காய வைத்து சிறிது சிறிதாகபோட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    இப்பொழுது தேங்காய் சீரகம் சோம்பு பூண்டு இவற்றை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை நீங்கியதும் மிளகாய்த்தூள் உப்பு அதில் சேர்த்து கிளறவும்

  5. 5

    ஒரு நிமிடம் கிளறியதும் மூன்று ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் சேர்ப்பதனால் கிழங்குடன் இந்த மசாலா சேர்ந்து இருக்கும்இப்போது பொறித்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கை இந்த மசாலா கலவையில் சேர்க்கவும்

  6. 6

    மிகவும் சுலபமான முறையில் சேப்பங்கிழங்கு பொரியல் கல்யாண வீடுகளில் செய்வது போல ருசிப்பதற்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes