ஒரிஸ்ஸா உணவு (sooji kakara pitha recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

ஒரிஸ்ஸா உணவு (sooji kakara pitha recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 1/2 தேக்கரண்டி உப்பு
  3. 1 தேக்கரண்டிநெய்
  4. 1 தேக்கரண்டி சோம்பு
  5. 2 மேசைக்கரண்டி சீனி
  6. 3 கப் தண்ணீர்
  7. பூரணம் தயாரிக்க
  8. 1 கப் தேங்காய் துருவல்
  9. 1/2 கப் வெல்லம்
  10. 1/4 தேக்கரண்டி மிளகுப் பொடி
  11. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்ப் பொடி
  12. கையில் தடவ
  13. 2 மேசைக்கரண்டி நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி ரவை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.

  2. 2

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறவும்.ரவை நன்கு வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.

  3. 3

    ஒரு கனமான வாணலியில் தேங்காய் துருவல், வெல்லம், மிளகுப் பொடி சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி கலவையை ஆற வைக்கவும்.

  4. 4

    இனிய ரவைக் கலவையை உருண்டைகளாக உருட்டவும். இனிய தேங்காய் வெல்லம் பூரணத்தையும் உருண்டைகளாக உருட்டவும்.

  5. 5

    கையில் நெய் தடவிக் கொண்டு ரவைக் கலவையைத் தட்டி தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து மறுபடியும் உருண்டையாக்கி அதை வடை போல் தட்டவும்.

  6. 6

    சுடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    மிகவும் சுவையான மாலை நேர ஸ்னாக். வெளியே க்ரிஸ்பியாகவும், உள்ளே மெதுவாகவும் உள்ள அருமையான ஒரிஸ்ஸா ஸ்னாக்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes