தால் தடுக்கா பஞ்சாப் மாநில உணவு (Thaal Thadukka Recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ஆறு நபருக்கு
  1. 100 கிராம்துவரம் பருப்பு
  2. 100 கிராம்பாசிப்பருப்பு
  3. நாலு ஸ்பூன்நெய்
  4. 2 ஸ்பூன்வெண்ணெய்
  5. மூன்றுகாய்ந்த மிளகாய்
  6. ஒரு ஸ்பூன்சீரகம்
  7. சிறிதுபெருங்காயம்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. சிறிதுகஸ்தூரி மேத்தி
  10. சிறிதுவெங்காயம்
  11. ஒன்றுபச்சை மிளகாய்
  12. 2 பல்பூண்டு
  13. சிறிதுதக்காளி
  14. சிறு துண்டுஇஞ்சி
  15. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  16. அரை ஸ்பூனமிளகாய் தூள்
  17. அரை ஸ்பூன்தனியா தூள்
  18. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி மஞ்சள் பொடி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும். பருப்பை நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தக்காளி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும் வேறொரு கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் சீரகம் போடவும். சீரகம் வெடித்ததும் காய்ந்த மிளகாய் பெருங்காயம் இஞ்சி பூண்டு இவற்றை அடுத்தடுத்து சேர்க்கவும். அது வதங்கியதும் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இவற்றை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும

  2. 2

    கடைந்து வைத்த பருப்பை அடுப்பில் வைத்து மிளகாய்த்தூள் தனியாத்தூள் இவற்றை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தாளித்து வைத்த கலவையை பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு கஸ்தூரி மேத்தி சேர்க்கவும். கடைசியாக வெண்ணெய் சேர்த்து உருகி வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும் கடைசியாக மல்லி இலை கருவேப்பிலை போடவும். மணமணக்கும் பஞ்சாபி தால் தடுக்க ரெடி. சாதத்துடனும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes